மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 05:13 pm
mp-farmer-loans-waived-by-incoming-government

மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்ற காங்கிரஸ் கட்சியின் கமல் நாத், தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதை போல, தனது முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நூலிழையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் கமல் நாத் தலைமையில் இன்று ஆட்சியமைத்தது. போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

கமல் நாத் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பின்னர், தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த முக்கிய வாக்குறுதியான விவசாய கடன் தள்ளுபடியை முதல்வர் கமல் நாத் நிறைவேற்றினார். விவசாய கடனை தள்ளுபடி செய்யும் அரசாணையை கமல் நாத் கையெழுத்திட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close