மும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 09:16 pm
mumbai-hospital-fire-kills-6

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள ESIC மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 6 பேர் பலியானார்கள்; மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஊழியர்கள், நோயாளிகள் என 147 பேர் தீயணைப்பு படை வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள ஈஎஸ்ஐசி மருத்துவமனையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடத்தின் மேல் பகுதியில் தீ வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள், 15 தண்ணீர் லாரிகள் மூலம் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளே சிக்கிய மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி எடுத்து வந்தனர்.

ஆனால், இந்த சம்பவத்தில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடும் தீக் 
காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர முயற்சி எடுத்த தீயணைப்பு படை வீரர்கள் 147 வரை காப்பாற்றியுள்ளனர்.
மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close