லவ் ஜிகாத் ஹாதியாவின்  தந்தை பாஜகவில் இணைந்தார்!

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 06:35 pm
haidya-s-father-join-in-bjp

தனது திருமணத்தின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியாவின் தந்தையும், தீவிர கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளருமான கே.எம்.அசோகன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கேரள மாநிலத்தின் வைக்கம் பகுதியைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான அகிலா, கடந்த 2016-இல் முஸ்லிம் மதத்துக்கு மாறியதுடன் இஸ்ஸாமிய இளைஞரையும்  திருமணம் செய்து கொண்டார். அத்துடன் தமது பெயரையும் ஹாதியா என மாற்றிக் கொண்டார்.

மருத்துவ மாணவியான தனது மகள் "லவ் ஜிகாத்"தின் பெயரில் வலுகட்டாயமாக மதம் மாற்றப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என ஹாதியாவின் தந்தை கே.எம். அசோகன் போலீஸில் புகார் அளித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிர கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளரான அவர், தற்போது பாஜகவில் இணைந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close