பெய்ட்டி புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள ஏனாம்....!

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 01:47 pm
pyatti-storm-suffered-severe-damage-in-yenam

பெய்ட்டி புயலால் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகிய பெய்ட்டி புயல் நேற்று ஆந்திரா மாநிலம் கோதாவரி அருகே கரையை கடந்தது. இந்த புயலால் புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிரந்தியம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த போது 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வீடுகள் மீது மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. 

பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  சரிந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close