ராஜஸ்தானிலும் விவசாய கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு !

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 08:47 pm
rajasthan-govt-announces-farm-loan-waiver-for-loans-upto-rs-2-lakh

ராஜஸ்தான் மாநிலத்திலும் விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான வங்கி கடன்களை அம்மாநில அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் மத்தியபிரதேசம் மாநில முதல் அமைச்சராக பதவியேற்ற கமல்நாத் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்ய உத்தரவிட்டனர். 
 
பின்னர், சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் கடன்களை இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இந்த கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்வரை செலவாகும் எனவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close