காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி - இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்

  டேவிட்   | Last Modified : 19 Dec, 2018 09:33 pm
president-rule-at-jammu-kashmir

ஜம்மு-காஷ்மீரில் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

காஷ்மீரில் கடந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த கவர்னர் ஆட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த நிலவரம் தொடர்பாக, நேற்று (செவ்வாய்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. இதனை ஏற்று இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் பிரகடனத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (டிச.19) கையொப்பமிட்டார்.

ஆகையால், இன்று நள்ளிரவு முதல் அடுத்த ஆறுமாத காலத்திற்கு, ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close