கேரள மாநிலத்தில் பிரதமர் சுற்றுப்பயணம்.... !

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 03:56 pm
pm-modi-visit-to-kerala

கேரள மாநிலத்தில் பாஐக சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ள நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியேர் கலந்து காெள்ள உள்ளனர்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் ஐனவரி மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாஐக தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் திருச்சூரில் ஜன.27ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஐக தொண்டர்களுக்கிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே பாேல் இம்மாதம் 31ம் தேதி பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஐகவின் தேசிய தலைவர் அமித்ஷா தொண்டர்களுக்கிடையே உரையாற்றுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவை இட்டது.

அதையடுத்து கேரளத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மத்தியில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு  எழுந்தது. நாடெங்கிலும் தொடர்ந்து அமைதியான முறையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனிடையே, கடவுள் மறுப்பாளர்களும் பிற மதங்களைச் சேர்ந்த பெண்களும், ஹிந்துக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களை கேலி செய்யும் விதமாக இருமுடி கட்டாமல், விரதம் இருக்காமல் ஐயப்பன் சன்னிதானத்துக்குள் நுழையப்போகிறோம் என்று கிளம்பி சபரிமலைக்கு வந்தனர்.

 அதற்கு கேரளத்தில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிணராயி விஜயன் ஆதரவு தெரிவித்தார். அவையனைத்தும் அந்த அந்த மாநிலத்தில் வசித்து வரும் ஹிந்துக்கள் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷாவும் கேரள மாநிலத்துக்கு வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close