டெல்லியில் கடுங்குளிர்... விமான சேவை பாதிப்பு...!

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 04:38 pm
fog-in-delhi

தலைநகர் டெல்லியில் இன்று காலை கடும் குளிர் நிலவியது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதானால் சா‌லைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மட்டும் அல்லாமல், விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. அடர்ந்த பனி மூட்டத்தால் 200 மீட்டர் தொலைவிற்கு சாலைகளை பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இன்று அதிகால‌ை‌ 5.1 செல்சியஸ் அளவிற்கு வெப்ப நிலை குறைந்திருந்தது. கடந்த 2015 ஆண்டிற்கு பிறகு இந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் குறையும் என்று மண்டல வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close