ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார் பிரதமர் மோடி !

  டேவிட்   | Last Modified : 21 Dec, 2018 03:44 pm
modi-visited-gujarat-and-watched-unity-statue

குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கேவதியாவில் உள்ள குஜராத்தின் ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார்.

குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்றார். அங்கு கேவதியாவில் உள்ள குஜராத்தின் ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்ட அவர் அங்கு நடந்த எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை மற்றும் மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் படையினர் துப்பாக்கியால் செய்த சாகச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் குஜராத் மாநில சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சாகச நிகழ்ச்சிகளும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநில போலீசாரின் வருடாந்திர கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். மேலும் பாஜகவின் மகளிர் அமைப்பினரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close