மேற்கு நேபாளம்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்16 மாணவர்கள் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 08:52 am
nepal-bus-accident

மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 மாணவா்கள் உயிாிழந்தனா், 15 மாணவா்கள் காயமடைந்தனா். 

மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தின் கோராஹி பகுதியில்  பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிாியா்கள் கல்வி சுற்றுலா சென்றிருந்தனா். சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவா்கள் திரும்பி வந்து கொண்டுடிருந்தனா். அப்போது டாங் மாவட்டத்தின் துல்சிபூா் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை   இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 16 மாணவா்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தனா்.  15 மாணவா்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close