மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 பேரை மீட்க தீவிர முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 05:39 pm
operations-going-on-to-rescue-labourers-trapped-in-a-narrow-tunnel-in-a-coal-mine-in-meghalaya

மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 15 நாட்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவில் இருக்கும் அந்த சுரங்கத்திலிருந்து சிக்கியுள்ளவர்களை மீட்பது மிகப் பெரும் சவால் என்று மீட்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, மேகாலயாவின் சாய்பங்கில் இருக்கும் சட்ட விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம், இடிந்து விழுந்தது. இதையடுத்து, அருகிலிருந்து லிட்டியன் நதியிலிருந்து சுரங்கத்திற்குள் நீர் புகுந்தது. இதனால், சுரங்கத்திற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 15 பேர், உள்ளேயே மாட்டிக் கொண்டனர். உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க, அரசு சார்பில் கடந்த 15 நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், மீட்புப்பணியில் இதுவரை எந்தவித வெற்றியும் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து பேரிடர் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் வரலாற்றிலேயே இதைப் போன்ற ஒரு விஷயத்தை நாங்கள் சந்தித்தில்லை. சிக்கியுள்ளவர்களை மீட்பது மிகப் பெரிய சிரமமாக இருக்கும். எங்களுக்கு சுரங்கம் குறித்து முறையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. சுரங்கம் மிக ஆழமானதாக இருக்கிறது. நொடிக்கு நொடி, அதற்குள் நீர் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றார்.

அவர் மேலும், இதைப் போன்ற மிகவும் குறுகலான சுரங்கங்களுக்கு முறையான வரைபடம் இருக்காது. ஆகவேதான், மீட்புப் பணியில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்கிறோம். உள்ளே இருப்பவர்களை உயிருடனோ, இறந்த நிலையிலோ மீட்க நாங்கள் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close