நியூ இயர் கொண்டாட்டத்துக்கு தடை விதிங்க!  பெங்களூரு போலீசிடம் ஹிந்து அமைப்பு கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 02:37 pm
ban-new-year-celebrations-in-bengaluru-hindu-outfit-urge-to-police

பெங்களூரு மாநகரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறுவதால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு அங்கு அனுமதி வழங்கக்கூடாது என பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் ஹிந்து அமைப்பு கோரிக்கை மனு அளித்துள்ளது.

ஹிந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் கௌடா சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம்  நம்நாட்டு மக்களை, குறிப்பாக இளைஞர்களையும், இளம்பெண்களையும் பல விதத்தில் கெடுத்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாக கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டில், நள்ளிரவு வேளையில் நம் இளைஞர்களும், இளம்பெண்களும் மது அருந்திவிட்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் உச்சமாக "ஈவ் டீசிங்" போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறுகின்றனர். சர்வதேச அளவில் நம் இளம்தலைமுறையினரின் நன்மதிப்பை குறைப்பதாக இந்நிகழ்வுகள் அமைந்து வருகின்றன. 

எனவே, பெங்களூரு மாநகரின் சர்வதேச அடையாளமாக திகழ்ந்து வரும்  எம்.ஜி சாலை, பிரிகேட் சாலை ஆகிய இடங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close