காஷ்மீரில் கடும் குளிர்....!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 09:49 am
heavy-cold-in-kashmir

காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

கடும் பனிப்பொழிவு காலம் என்றழைக்கப்படும் சில்லாய்-கலான் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றுள்ளது. பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 

லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 15.8 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது நடப்பு குளிர்காலத்தின் அதிக குளிரான இரவாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close