டெல்லியில் கடும் பனிமூட்டம்; மக்கள் அவதி

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 11:37 am
heavy-fog-prevails-in-delhi

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் பாெதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்பபட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு, ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

டெல்லிக்கு வரும் ரயில்கள் மற்றும் புறப்படும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன. இந்நிலையில், டெல்லியில் இன்று காலை 3.7 டிகிரி செல்சியசுக்கு வெப்பம் பதிவாகியது. அடுத்த சில நாட்களில் இது மேலும் குறையக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close