வெற்றி தோல்வி குறித்து கட்கரி கருத்து

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 02:55 pm
katkaris-comment-against-victory-and-loose

கட்சி வெற்றி பெற்று விட்டால் அதற்கான புகழைப் பெறுவதற்கு பலர் போட்டி போடுவதாகவும், தோற்று விட்டால் அதற்கு பொறுப்பேற்க ஒருவரும் முன் வருவதில்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து துறை அ‌மைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது பேசிய நிதின் கட்கரி, தேர்தலில் கட்சிக்கு வெற்றி கிடைத்து விட்டால் அதற்கான புகழைப் பெற பந்தயமே நடக்கும் என்று தெரிவித்தார். ஆனால் தோற்று விட்டால் ஒருவர், மற்றொருவரைகுற்றம் சாட்டுவது வாடிக்கையாக உள்ளது என்றார். வெற்றிக்கு பல தந்தைகள் இருப்பார்கள், ஆனால் தோல்வி மட்டும் அனாதையாகவே இருக்க  நேரிடும் என்று அவர் விமர்சித்தார். வெற்றியோ, தோல்வியோ தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close