ராஜஸ்தானில் செயற்கையான உரத்தட்டுப்பாடு !

  முத்துமாரி   | Last Modified : 23 Dec, 2018 05:26 pm
artificial-urea-demand-in-rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைத்த ஆறே நாட்களில் அம்மாநிலத்தில் கடும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில தாே்தல்களில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்றுக்காெண்டார். பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பதவியேற்று 6 நாட்களுக்குள் அம்மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பாஜக ஆட்சியின் போது 266 ரூபாய்க்கு விற்கப்பட்ட உர மூட்டை தற்போது காங்கிரஸ் ஆட்சியில் 350 விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close