சபரிமலைக்கு சென்ற 11 பெண் பக்த'கேடி'கள் திரும்பி வந்தனர்...!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 07:43 pm
sabarimala-11-tamil-women-returned-from-pamba

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் சென்ற 11 பெண்களை, ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப வரும் சூழல் உருவானது. 

சபரிமலையில், மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. வரும் 27ஆம் தேதி, மண்டல பூஜை நடைபெற உள்ளதால், தற்போது சபரிமலையில் பக்தர்களின்  கூட்டம் அதிகரித்து வருகிறது. 

10 முதல் 50 வயது உடைய பெண்கள் சாமி தரிசனம் செய்யக் கூடாது என்பதற்காக ஐயப்ப பக்தர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனால் அங்கு கடந்த 16-ந்தேதி முதல் 144 தடை உத்தரவும் போடப்பட்டு, வரும் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற அமைப்பைச் சேர்ந்த 50 வயதிற்குட்பட்ட பெண்கள், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி என்பவரின் தலைமையில் சபரிமலைக்கு சென்னையில் இருந்து வேன் மூலம் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த ஐயப்ப பக்தர்களும் தயார் நிலையில் இருந்துள்ளனர். பெண் பக்தர்கள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பம்பை சென்றடைந்தனர். அங்கு அவர்கள் வேனில் இருந்து இறங்கியதும் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த குருசாமிகளிடம் தங்களுக்கு இருமுடி கட்டும்படி கேட்டனர்.  ஆனால் யாரும் அவர்களுக்கு இருமுடி கட்டவில்லை. இதனால் அந்த குழுவில் உள்ள 6 பெண்கள் தாங்களாகவே இருமுடி கட்டி கொண்டனர்.

பின்னர் இந்தப் பெண்கள் அனைவரும் கருப்பு சேலை அணிந்தபடி சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோ‌ஷமிட்டபடி, சபரிமலை சன்னிதானத்தை அடைய முற்பட்டனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் சென்றதும் அதற்கு மேல் அவர்களை முன்னேற விடாமல் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பெண் பக்தர்கள் 11 பேரும் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.   ஆனால் சென்னை பெண் பக்தர்கள் தாங்கள் சபரிமலை செல்வதில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும், அவர்கள் அங்கிருந்து கலைய மறுத்தனர்.   இதனால், சென்னை பெண் பக்தர்கள் 11 பேரையும் அங்கிருந்து பாதுகாப்பாக பம்பையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு பத்தினம் திட்டா போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் 11 பெண்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, பெண்களும் திரும்பி செல்ல சம்மதித்தனர். அதன் பின்னர் அனைத்து பெண்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி பம்பையில் இருந்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close