ராஜஸ்தான் அமைச்சரவை விஸ்தரிப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 03:43 pm
13-cabinet-ministers-10-state-ministers-take-charges-in-rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 கேபினட் அமைச்சர்கள்  மற்றும் 10 இணைஅமைச்சர்கள் இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் கல்யாண்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கென நடைபெற்றத தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பறியது. அதையடுத்து நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின்போது முதலமைச்சராக அசோக் கெலாட், துணை முதல்-அமைச்சராக சச்சின் பைலட் ஆகிய இருவரும் பதவி ஏற்றிருந்தனர்.

இதையடுத்து ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதி அமைச்சரவை பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் அதுகுறித்து, அவர்கள் இருவரும் ஆலோசனைகள் நடத்தினர். அப்போது முதல் கட்டமாக அமைச்சரவையில் 23 பேருக்கு இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 22 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். ஒருவர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மந்திரிகளுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. 23 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர்  கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 23  பேரில் 13 பேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் ஆவார்கள். 10 பேர் இணை அமைச்சர்கள் ஆவார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close