இந்தியக் கலாச்சாரத்தை வீழ்த்த முயற்சி:திரிபுரா முதல்வர் குற்றச்சாட்டு

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Dec, 2018 02:43 pm
tiripura-cm-blames-communists

முகாலயர்களை போல் கம்யூனிஸ்ட்கள், இந்திய கலாசாரத்தையும், நாகரீகத்தையும் அழிக்க முயற்சி செய்து வருவதாக திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவின் பழங்கால கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றை பின்பற்ற முடிவு செய்த திரிபுரா மக்கள், கம்யூனிஸ்ட்களை நிராகரித்துள்ளனர்.

சில குண்டர்களை தான் கம்யூனிஸ்ட்கள் கட்சிக்காரர்களாக வளர்த்து விட்டனர். இந்திய கலாசாரத்தையும், நாகரீகத்தையும் அழிக்க அவர்கள் முயற்சி செய்ததுடன், மக்கள் குரலை நசுக்கவும் செய்தனர் மேலும் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை தவறாகவும் வழிநடத்தி வந்தனர்.

 உலகை வென்று தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவேன் என்று அலெக்சாண்டர் புறப்பட்டு பல நாடுகளை வென்றார்.  நம் தேசத்தையும் வென்றுவிட முடியும் என நினைத்து நம் எல்லைக்குள் வந்தார். மாபெரும் படையுடன் இங்க வந்த அவர். நம் அரசர்களில் ஒருவரா போரஸ் என்ற புருஷோத்தமனிடம் வீழ்ந்தார்.

 அதைத்தொடர்ந்து முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த நம் பாரத கலாசாரத்தை அழிக்க முயன்று தோல்வியடைந்தனர். ஆனால், தற்போது கம்யூனிஸ்ட்கள் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குற்றம்சாட்டியுள்ளார்..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close