மேகாலயா: சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறுத்தம்

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Dec, 2018 02:07 pm
rescue-operations-are-suspended-in-the-mine-in-meghalaya

மேகாலயா மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் கசான் பகுதியில் உள்ள லும்தாரி கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த 13ம் தேதி இந்த சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 370 அடி ஆழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.


அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை போராடி வருகிறது. ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெள்ளம் வடியவில்லை.

இந்நிலையில் சுரங்கத் தொழிலாளர் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு மீட்புப்பணிகள் தொடரும் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. முதல்கட்டமாக 15 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close