காஷ்மீரில் நிலவும் கடும் குளிர்- பொதுமக்கள் அவதி

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Dec, 2018 10:44 am
heavy-fog-prevails-in-kashmir

காஷ்மீரில் கடந்த11 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு பனி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக  இரவு நேர வெப்பநிலை மைனஸ் 6.8 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

தெற்கு காஷ்மீர், கோகரங், குப்வாரா பகுதிகளில் கடும் குளிர் இருந்தது. இது போன்ற குளிரால் காஷ்மீர் தால் ஏரி உறைந்து போனது. 
மேலும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய குழாய்கள் பனிகட்டியானதால் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டது.மேலும் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடும் குளிரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

 பனி மூட்டம் காரணமாக சில இடங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. இதே வானிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close