ஐயப்பனின் பாரம்பரியத்தை காப்பாற்ற வலியுறுத்தி 745 கிமீ பிரார்த்தனை பேரணி..!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 08:08 pm
ayyappan-worship-745-kms

ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தை காப்பாற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காசர்கோடு வரை சாலை நெடுங்கிலும் லட்சக்கணக்கான பெண்கள் கையில் தீபம் ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்ட தொடர் சங்கிலி பேரணியில் பங்கேற்றனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்காமல் தடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், 10வயது முதல் 50 வரையிலாக பெண்கள் சபரிமலைக்கு போக வேண்டாம் எனவும், ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தை காப்பாற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காசர்கோடு வரை சாலை நெடுங்கிலும் லட்சக்கணக்கான பெண்கள் கையில் தீபம் ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்ட தொடர் சங்கிலி பேரணியில் பங்கேற்றனர். 

இந்தப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி கேரள மாநிலம் காசர்கோட் பகுதி வரை நடைபெற்றது. இதன் மொத்த தூரம் 745 கி.மீ. ஆகும். சாலை ஓரம் சிறு வயது பெண் குழந்தைகள் முதற்கொண்டு, வயதான பெண்கள், ஊனமுற்ற பெண்கள் உள்ளிட்டோர் கையில் தீபமேந்தியவாறு நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். 

745 கி.மீ. பாதை  நெடுங்கிலும், ஐயப்ப ஜோதியில் ஜொலித்தது என்றால் மிகையல்ல. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close