ராமருக்கு வீடு கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு எம்.பி. மனு!

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 11:39 am
bjp-mp-seeks-house-for-lord-rama

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கடவுள் ராமருக்கு வீடு ஒதுக்க வேண்டும் எனக் கோரி, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோஷி தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி  ஹரி நாராயண் ராஜ்பார் அயோத்தி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள மனுவில், "கடவுள் ராமர் தற்போது  சிறு கூடாரத்தில் வசிப்பதாகவும், அவருக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு  கட்டித் தர வேண்டும்" எனவும் கோரியுள்ளார்.

அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வகையில் அவர் இந்த மனுவை அளித்துள்ளார்.

"கடவுள் ஹனுமன் ஒரு தலித்" என உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி அண்மையில் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராமருக்கு வீடு கேட்டு எம்.பி. ஒருவர் மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close