சிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்ட ராணுவத்தினர் !

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Dec, 2018 12:12 pm
army-rescuses-2-500-tourists-in-sikkim

பனிப் பொழிவினால் சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 2500 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. டெல்லி, பீஹார், உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. 

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி படர்ந்துள்ளது. 

இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நீடித்தது. 

இதுபற்றி தகவல் அறிந்த ராணுவ வீரர்கள், அங்கு சென்று பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close