மேகாலயா சுரங்க விபத்து: இறுதி கட்ட மீட்பு நடவடிக்க‌ை‌ !

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Dec, 2018 01:02 pm
rescue-opperations-have-reached-final-stage-in-megalaya-mine

மேகாலயாவில் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 70க்கும் அதிகமான தேசிய பேரிடர் மீட்பு படையினர் 320 அடி ஆழம் கொண்ட சுரங்கத்திற்குள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று நீச்சல் வீரர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  புவனேஸ்வரிலிருந்து 10 அதிக செயல் திறன் கொண்ட பம்புகள் கொண்டு வரப்பட்டு சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடற்படையின் செயல் திறன் மிக்க 15 நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேகாலயா சுரங்கத்திற்குள் கடந்த 13-ம்தேதி 15 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்பதற்காக 2 வாரத்திற்கும் மேலாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அருகில் உள்ள சுரங்கத்தில் இருந்தும், ஆற்றில் இருந்தும் நீர் வெளியேறி சுரங்கத்திற்குள் நுழைவதால் மீட்பு பணியில் சிக்கில் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் குறைந்த அழுத்தம் கொண்ட பம்புகளை வைத்து நீரை வெளியேற்ற முயன்றனர். இதில் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து பக்கத்து மாநிலங்களில் இருந்து அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close