உ.பி. கலவரம்: 32 பேர் மீது வழக்குப் பதிவு

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 09:45 am
case-registered-on-32-persons-in-uttar-pradesh

உத்தரபிரதேச மாநிலம், காசிபூர்  பகுதியில் நேற்று நிகழ்ந்த கலவரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்  கொல்லப்பட்டது தொடர்பாக 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசிபூர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், நிஷாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் கைகலப்பு கலவரமாக மாறவே, கலவரக்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பலியானார்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 32 பேர்  மீது காசிபூர் நகர போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பெயர் குறிப்பிடப்படாத 60 பேரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நபர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாத துவக்கத்தில், புலந்த்சாகர் பகுதியில், பசுவதை தொடர்பாக வெடித்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close