கலவரக்காரர்களை அடித்துக் கொல்லுங்கள்: வைரலாகும் துணைவேந்தர் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 03:09 pm
students-should-kill-miscreants-vc-viral-speech

வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபடுவோரை மாணவர்கள் அடித்து சாகடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காஜிபூரில் நேற்று நிகழ்ந்த கலவரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கலவரக்காரர்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், காஜிபூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜாராம் யாதவ்  பேசியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலவரங்கள், வன்முறை சம்பவங்களின்போது மாணவர்கள் அவற்றால் பாதிக்கப்பட்டு கண்ணீர்  சிந்தக் கூடாது. மாறாக, கலவரக்காரர்களை அடித்து கொல்ல வேண்டும். அதனால் வரும் பிரச்னைகளை பல்கலைக்கழக நிர்வாகம் பார்த்து கொள்ளும் என ராஜாராம் யாதவ் பேசியுள்ளார்.

கண்டனம்: துணைவேந்தரின் இந்தப் பேச்சுக்கு உத்தரபிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரை மாநில அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
newstm.in
 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close