ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Dec, 2018 11:45 am
fire-accident-in-a-garment-factory-in-thane-district

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி என்ற பகுதியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று காலையில் இந்த தொழிற்சாலையிலிருந்து புகை வருவதை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். 

அதன்‌பேரில் சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. 

இந்த தீவிபத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பாேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close