புத்தாண்டு கொண்டாட்டம்- மும்பையில்1,500 பேர் மீது வழக்கு பதிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jan, 2019 12:23 pm
mumbai-1500-cases-filed-by-police

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் கார், பைக் ஓட்டிச் சென்ற 1,500 பேரை போலீசார் பிடித்தனர்.

2019ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதற்காக நேற்று இரவு முதலே கொண்டாட்டங்கள் தொடங்கின. முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நட்சத்திர ஓட்டல்களில் ஆடல், பாடல்களுடன் நிகழ்ச்சிகள் களைகட்டின. பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

இந்நிலையில் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் கார், பைக் ஓட்டிச் சென்ற 1,500 பேரை போலீசார் பிடித்தனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திய 70க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close