காங்கிரஸ் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுவதா?: அமைச்சர் வேதனை

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 02:42 pm
congress-has-stooped-to-such-a-low-level-to-doctor-a-tape-goa-minister-vishwajit-p-rane

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தான் பேசியதாக காங்கிரஸ் கட்சி, தானாக ஜோடித்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது என கோவா மாநில அமைச்சர் விஷ்வஜித் பிரதாப்சிங் ராணே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தனது கீழ்த்தரமான இதுபோன்ற செயல்களால் மாநில அமைச்சரவைக்கும், முதல்வருக்கும் இடையே தவறான புரிதலை ஏற்றப்படுத்த முயற்சிக்கின்றது எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். 

மேலும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து ஒருபோதும் பேசவில்லை என்றும், இந்த ஆடியோ விவகாரம் குறித்து உரிய முறையில் அவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராணே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சர் ராணே எழுதியுள்ள கடிதத்தில், "ரஃபேல் விவகாரம் குறித்து தான் யாரிடமும் பேசவில்லை என்றும், இது காங்கிரஸின் ஜோடிக்கப்பட்ட ஆடியோ பதிவு" என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக,  ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களும், முதல்வர் மனோகர் பாரிக்கர் வசம் உள்ளது என, கோவா மாநில அமைச்சர் விஷ்வஜித் பிரதாப்சிங் ராணே  பேசியதாக ஆடியோ பதிவு ஒன்றை இன்று காலை காங்கிரஸ் வெளியிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close