உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jan, 2019 10:35 am
up-bjp-mla

உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர் நகர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் செய்னி. இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர், "இந்தியாவில் வாழ அச்சப்படவேண்டியதாக உள்ளது என்று கூறுபவர்களை குண்டு வைத்து கொல்ல வேண்டும்" என்றார். 

மேலும் தனக்கு அமைச்சர் பதவி வழங்கினால், சர்ச்சைக்குரிய வகையில் பேசும் நபர்களை நானே குண்டு வைத்து கொல்வேன் என்று தெரிவித்தார். அவரின் சர்ச்சை பேச்சு உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close