கேரள வன்முறை : சிபிஎம், எஸ்டிபிஐ தொண்டர்கள் 5 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 11:27 am
kerela-5-arrested-connection-with-violence-at-banth

கேரளத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பாஜக தொண்டர்களை  தாக்கியது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 3 பேரை திரிச்சூர் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அத்துடன், பந்தளம் பகுதியில் நடைபெற்ற தாக்குல் சம்பவத்தில், சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக, ஆளும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் மீதும் கேரள போலீஸார்  இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 302 மற்றும் 307 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானத்துக்குள் இரண்டு பெண்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரளத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close