மதக்கலவரத்தினைத் தூண்டுகிறாரா "பிண"ராயி?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 04 Jan, 2019 03:32 pm

scale-communal-by-pinarayi-vijayan

சபரிமலை சந்நிதானத்திற்குள் 10 – 50 வயதிற்குட்பட்ட பெண்களை எப்படியாவது ஏன் அழைத்துச் செல்ல பினராயி அரசு முனைகிறது? 

நீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? 

 “பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாகக் கருதக் கூடாது; அனைத்து வயதுப் பெண்களையும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் “ 

எந்த இடத்திலும், அவசியம் பெண்களை அங்கே கூட்டிச் செல்ல வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தவில்லை. ஏற்கனவே தேவசம் போர்டு போட்டிருந்தத்  தடையை மட்டும் விலக்கியுள்ளது தீர்ப்பு. 

தீர்ப்பின் படி, சபரிமலைக்குச் சென்று வழிபட விரும்பும் பெண்கள் இனி செல்லலாம் என்பது மட்டும் தான். மாநில அரசாங்கம் கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அல்ல. இப்படி இருக்கும் போது, பினராயி விஜயனின் அரசு, இத்தனைக் காவலர்களை அங்கே நிறுத்தி ஒருவகையான பதட்டத்தை உருவாக்கியும், வலிந்து மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்களை அழைத்துச் செல்வதன் நோக்கம் என்ன? 

முதல் காரணம், சமீபத்தில் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பினை திறம்படக் கையாளத் தெரியாமல் ஏற்பட்ட நிர்வாகத் தோல்வி. அத்துடன்,  அந்தச் சூழலில் தன் அரசியல் வைரிகளான சேவாபாரதியும் மத்திய அரசும் களத்தில் ஆற்றிய சேவையும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதையும் சமாளிக்க அமீரக நாடு அள்ளிக் கொடுக்குது, மத்திய அரசு ஏதும் கொடுக்க மாட்டேங்குதுனு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார். நாங்கள் அப்படி எந்தவொரு அறிக்கையும் கொடுக்க வில்லை என்று அதிலேயும் மண்ணள்ளிப் போட்டது அமீரகச் செய்திகள்.

அடி பட்ட பாம்பாக புழுங்கிக் கிடந்த போது தான் இரையாக வந்தது சபரிமலைத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பினால், அந்த மாநில அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. ஆனால், இதை ஏதோ அரசியல் வாழ்வின் லட்சியம் என்பது போல் மெனக்கெட்டு மூர்க்கமாகச் செய்யத் தொடங்கினார். இப்படியான மாநில் அரசியல் பழிவாங்குதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்திய அளவில், சர்வதேச அளவில், இந்தத் தீர்ப்பினை / சூழலை  பயன்படுத்தி ஒரு நாசவேலைக்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதாவது தலைமேல் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தருணத்தில் ஆளும் பாஜக அரசினைக் குற்றம் சொல்லும் வகையாக பெரிதாக ஏதும் இல்லை. மேலும் கடந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் மதக் கலவரங்கள் நிகழும். மாற்று மதத்தினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தனர். ஆனால், நடந்தது வேறு, வழக்கமாக நிகழும் மத மோதல்கள் கூட கடந்த நாலரை ஆண்டுகளில் நடக்கவில்லை. ஊழலே இல்லாத ஆட்சியாக வேறு அமைந்து விட்டது. இப்பொழுதைக்குத் தேர்தல் பிரசாரமாக எதை வைப்பது? 

கேரளத்தில் மத மோதலைத் தூண்டி விட்டால் இரண்டு விளைவுகள் நிகழும். ஒன்று பிற மதத்தினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அல்லது இந்துக்கள் கடுமையாகத் தாக்கப்படுவார்கள். 

பிற மதத்தினர் கடுமையாகத் தாக்கப்பட்டால், ஐயோ பாருங்கள், நாங்கள் சொன்னது போலவே நடந்து விட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற மதத்தினரை இந்தியாவில் நிம்மதியாக வாழவிட மாட்டார்கள் என்றும், 

இந்துக்கள் பாதிக்கப்பட்டால், இயல்பாகவே தம்மைக் காக்கத் தவறியது பாஜக அரசு தான் என்ற கோபம் வரும்.

இரண்டில் எது நடந்தாலும் அது இடதுசாரிகளுக்குச் சாதகமாகவே முடியும். அல்லது ஆளும் பாஜக அரசிற்கு மிகப் பெரிய அவப்பெயரைக் கொடுக்கும். இந்த ஒற்றைக் கலவரத்தை மீடியா மூலம் பெரிதாக்கி தேசமெங்கும் பாஜவுக்கு எதிரான அலையை உருவாக்கத் திட்டம் தீட்டப் பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

பாஜக இதை எப்படி சமாளித்து மீளப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.