எம்எல்ஏ வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு: 20 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 08:38 am
bomb-hurled-at-mla-residence-in-kerela

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ வீட்டின்  மீது  நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதையடுத்து, அங்கு நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த எம்எல்ஏவான சம்ஷீரின் வீடு கன்னூர் மாவட்டத்துக்கு உள்பட பகுதியில் உள்ளது. இவரது வீட்டின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசினர்.
இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக 20 பேரை கன்னூர் போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
முன்னதாக, கேரளத்தில் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியைச்  சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close