கடும் பனிமூட்டம்- டெல்லியில் விமான சேவை பாதிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 12:51 pm
air-traffic-is-disturbed-in-delhi

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் 9 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டத்தால்  பகல் நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்லும் நிலைதான் உள்ளது.

இந்நிலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து வந்திறங்க வேண்டியது என 4 உள்நாட்டு விமான சேவைகளிலும், 5 சர்வதேச விமான சேவை என 9 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதே போல் ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close