இமாச்சலில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 03:09 pm
school-bus-turns-turtle-in-himachal-7-dead

இமாச்சல பிரசே மாநிலத்தில் இன்று பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் டாஹூ- சாங்கரா சாலையில் பள்ளி பேருந்து ஒன்று 16 பள்ளி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் பாேலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close