ஊருக்குதான் உபதேசம் என்பதற்கு உதாரணமாக திகழும் ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:07 pm

ragul-keep-mum-about-petrol-price-hike-in-karnataka

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நாள்தோறும் குறைத்து கொண்டு வரும் நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் இவற்றின் விலை கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவற்றின் விலை உயர்வை முன்வைத்து மத்திய அரசை விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தயவில் ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில், எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதை கண்டும் காணாமல் இருப்பதன் மூலம், "ஊருக்குதான் உபதேசம், நமக்கல்ல" என்ற சொற்றொடருக்கு அவர் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் கலால் வரியில் 2.50 ரூபாயை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறைத்தது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் அத்தியாவசிய எரிபொருள்கள் மீதான வரி ரூ.2.50 குறைக்கப்பட்டது.இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டது.

தற்போது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இவற்றின் விலை தொடர்ந்து இறமுகமாகவே இருக்கும்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல் ,டீசல் மீது விதிக்கும் வரியை குறைக்க தயாராக இல்லை. இதற்கு மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலம் தான் சிறந்த உதாரணம்.

அங்கு பெட்ரோல் மீதான வாட் வரி 28.75% லிருந்து 32% ஆகவும், டீசல் மீது விதிக்கப்படும் வரி 17.73% லிருந்து 21%ஆகவும் சப்தமின்றி உயர்த்தப்பட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த மாநிலத் தலைநகர்  பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.70.84-க்கும், டீசல் 64.66 -க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, "எரிபொருள்கள் மீதான வரியை மத்திய அரசு குறைத்தே ஆக வேண்டும்.இல்லையெனில், நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்  நடத்தி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வைக்கும்" என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார்.

ஆனால், தன்னுடைய பேச்சுக்கு நேர்மாறாக, காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை சகட்டுமேனிக்கு உயர்த்தப்பட்டுள்ளதை ராகுல் காந்தி கண்டுகொள்ளாமல் இருப்பது மூலம், "ஊருக்குதான் உபதேசம்" என்பதற்கு சிறந்த உதாரணமாக அவர் திகழ்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.