ஜார்க்கண்ட்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்...!

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 03:53 pm
pm-modi-blames-congress

விவசாயிகளை தங்கள் ஆட்சிக் காலத்தில் கடன்வாங்கும் நிலைக்குத் தள்ளிய காங்கிரஸ் கட்சி, தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் மீண்டும் ஏமாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையில் மண்டல் அணைத் திட்டத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் பாலாமு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்த திட்டங்களை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றியிருந்தால், விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

முதலில் விவசாயிகளை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளிய காங்கிரஸ், தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்றுவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

காங்கிரசை பொறுத்தவரையில் விவசாயிகளை வாக்கு வங்கிகளாக கருதுவதாகவும், ஆனால் பாஜக அவர்களை உணவு அளிப்பவர்களாக பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close