லஞ்ச குற்றச்சாட்டு: அமைச்சர்களின் தனிச் செயலர்கள் மூவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 10:01 am
uttar-pradesh-3-secretaries-of-up-minister-s-has-arrested

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களின் மூன்று தனிச் செயலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநில அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருக்கும் ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் தனிச் செயலராக இருந்து வந்தவர் ஓம் பிரகாஷ் காஷ்யப். இவர், துறைரீதியான பணியிட மாறுதலுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கேட்பது போன்று பேரம் பேசும் விடியோ, அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று சுரங்கங்கள் துறை அமைச்சர் அர்ச்சனா பாண்டே மற்றும் கல்வித் துறை அமைச்சர் சந்தீப் சிங் ஆகியோரின் தனிச் செயலர்களும் துறைரீதியான பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததும் ரகசிய விடியோ மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

தலைமைச் செயலகத்தில் உள்ள துறை அலுவலங்களில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த பேரங்கள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மாநில ஏடிஜிபி ராஜீவ் கிருஷ்ணன் தலைமையிலான இக்குழு, தமது விசாரணை அறிக்கையை தலைமைச் செயலருக்கு அளித்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில்,ஓம் பிரகாஷ் காஷ்யப் உள்ளிட்ட மூன்று தனிச் செயலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு தமது அரசில் துளியும் இடமில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவோர் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என  முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close