கை, கால்களை வெட்டுவேன்: வனத்துறை அதிகாரிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 03:03 pm
chop-off-your-hands-and-legs-congress-mla-threatens-forest-official-in-karnataka

வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டுவதற்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த அதிகாரியை, காங்கிரஸ் எம்எல்ஏ கை, கால்களை வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பத்ரவதியில் புதிய கோயிலை கட்டுவதற்காக கடந்த  31- ஆம் தேதி  அங்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும், கோயில் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வனத் துறைக்கு சொந்தமானது என்பதால், குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்ட  உரிய முன் அனுமதி பெற வேண்டும் என வனத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உடனே, கோயில் கட்ட வன அதிகாரி ஆட்சேபம் தெரிவிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான சங்கமேஸ்வராவிடம் முறையிட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட அதிகாரியை மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். மேலும், "இங்கு திட்டமிட்டப்படி கோயில் கட்டப்படும். அதனை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கை, கால்களை நானே வெட்டுவேன்" என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

அரசு அதிகாரி ஒருவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவின் வரம்பு மீறிய பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமை இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close