மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு தடைபோடும் மம்தா!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 01:46 pm
bengal-says-no-to-centre-s-ayushman-bharat-scheme

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலிருந்து மேற்குவங்க அரசு விலகுவதாக, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 10.74 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு தரும், பிரம்மாண்ட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர்  23-ஆம் தேதி தொடங்கி வைத்தார். 

இத்திட்டப்படி, ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்,  மத்திய அரசின் திட்டத்துடன் இணைக்கப்பட்டு ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு விகிதாச்சாரம் முறையே 60 மற்றும் 40 சதவீதமாக இருக்கும்.

மேற்குவங்க மாநில அரசும், மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு இதுநாள்வரை அதனை நடை முறைப்படுத்தி வந்தது.

இந்த நிலையில், மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மேற்குவங்கத்தில் இனி செயல்படுத்தப்படாது எனவும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மாநில அரசின் காப்பீடு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசு தமது மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, மேற்குவங்கத்தில் இனியும் தொடர்ந்து செயல்படுத்த விரும்பினால், இத்திட்டத்திற்கான முழுத் தொகையை மத்திய அரசுதான் செலுத்த வேண்டும்.  மாநில அரசின் பங்கான 40 சதவீதம் அளிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close