மேகாலயா சுரங்க விபத்து- உச்சநீதிமன்றம் உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 01:00 pm
megalaya-dont-stop-rescue-works-says-supreme-court

மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியைக்  கைவிட வேண்டாம் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து மீட்பு முயற்சிகள் நடைபெறட்டும் என்றும் சில நேரங்களில் அதிசயமான பலன்கள் கிடைப்பதுண்டு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

அதே நேரத்தில் சட்ட விரோதமாக சுரங்கத்திற்குள் தொழிலாளர்களை பாதுகாப்பின்றி அனுப்பிய நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் பாய்ந்த வெள்ள நீரை வெளியேற்றி தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close