தெலங்கானாவில் நடந்த விநோத திருமணம்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 01:07 pm
telangana-marriage-held-in-hospital


தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக விகாராபாத்தைச் சேர்ந்த நவாசும், அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா பேகமும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இருவரின் பெற்றோரும் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரேஷ்மா பேகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து ரேஷ்மா சிகிச்சை மேற்கொள்வதற்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த நவாசும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு வீட்டாரின் பெற்றொர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையிலேயே இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close