காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- விமான சேவை பாதிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 02:25 pm
flight-service-disturbed-due-to-snowfall


காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர்  மாநிலத்தின் பல நகரங்களில் இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஒரே சாலையான ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

பனிப்பொழிவு காரணமாக குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். தலைநகர் ஸ்ரீநகரில்  குறைந்தபட்ச வெப்ப நிலையாக மைனஸ் 8 டிகிரி செல்சியசாக இருந்தது. 

நகர் முழுவதும் பனிப்போர்வை போர்த்தப்பட்டு இருந்ததுபோல் காணப்பட்டது. இதே வானிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close