தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 12:10 pm
jammu-and-kashmir-two-terrorist-killed

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில், நேற்று நள்ளிரவு மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் போலீஸார் கூட்டாக மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட என்கவுன்ட்டரில், நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜீனத் -உல்-இஸ்லாம் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஐஇடி வெடிப்பொருள்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவனான ஜீனத், கடந்த 2015 -இல், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close