மும்பை- ‌போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jan, 2019 01:26 pm
mumbai-transport-workers-are-in-strike-for-the-7th-day

மும்பையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகரில் பெஸ்ட் எனும் அமைப்பின் சார்பில் அரசு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 வது நாளாக இன்றும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பயணிகள் ஆட்டோ, டாக்சி ஆகியவற்றில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close