பாஜகவுடன் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை: குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 10:11 pm
we-don-t-need-to-poach-bjp-mlas-kumaraswamy

பாஜக எம்எல்ஏ.க்களுடன் குதிரை பேரம் பேசி, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய அவசியமில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.

 கர்நாடக அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏவான ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வரும் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகியோர் மும்பையில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இதே காரணங்களுக்காக மேலும் 9 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.இதனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

"இந்தச் சூழலை எதிர்கொள்ள வசதியாக மாநில முதல்வர் குமாரசாமி, பாஜக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க அவர்களுடன் குதிரை பேரம் பேசி வருகிறார்" என, கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியிருந்தார்.

இக்குற்றச்சாட்டு குறித்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கூறும்போது, " காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு தற்போதும், சட்டப்பேரவையில் போதுமான எம்எல்ஏ.க்களின் பலம் உள்ளது. எனவே, நாங்கள் பாஜக எம்எல்ஏ.க்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. எங்கள் ஆட்சி தொடரும்" எனத் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close