ஆமாம்...பாஜக எம்எல்ஏ.க்களுடன் தொடர்பில் உள்ளோம்: காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 03:21 pm
we-are-in-touch-with-some-bjp-mlas-karnataka-congress

கர்நாடக அரசியல் சூழலை கருத்தில்கொண்டு, பாஜக எம்எல்ஏ.க்கள் சிலருடனும் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அண்மையில் நீக்கப்பட்டனர். மேலும், அக்கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏ.க்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்களால், கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு மாற்றாக, பாஜக எம்எல்ஏ.க்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் குமாரசாமி இறங்கியுள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை மறுத்த குமாரசாமி, "பாஜக எம்எல்ஏ.க்களுடன் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமீர் அகமது கூறும்போது, "காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் யாராவது குதிரை பேரத்தில் ஈடுபட்டால், நாங்கள்  சும்மா இருக்கமாட்டோம்.

எங்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் 5 பேர் மும்பையில் உள்ளனர். அவர்களுடன் சமாதானம் பேசி வருகிறோம். கர்நாடக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, பாஜக எம்எல்ஏ.க்கள் சிலருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close