பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்கள்- மெகபூபா முப்தி

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jan, 2019 05:30 pm
kashmir-mehbooba-mufti-controversial-speech

காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகளை மண்ணின் மைந்தர்கள் என்று பேசிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி சர்ச்சயைில் சிக்கியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாகிஸ்தானுடனும், பிரிவினைவாதிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாத தலைவர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அப்போது தான் துப்பாக்கி கலாச்சாரம் ஒழியும் என்றும் கூறியுள்ளார். 

பிரிவினைவாதிகளை சுட்டுக் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ள மெகபூபா முப்தி, அவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்றும், சொத்துகள் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தன்று மெகபூபா முப்தி இவ்வாறு பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close