திறந்தவெளியில் நடத்தப்பட்ட டிப்ளமோ தேர்வு... மத்தியப் பிரதேசத்தில்தான் இந்தக் கூத்து!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 07:31 pm
madhya-pradesh-education-mafia-computer-application-diploma-exams-conducted-in-fields

மத்தியப் பிரதேச மாநிலம், மொரினா பகுதியில் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான கணினி தேர்வு திறந்தவெளியில் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், மொரினா  பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பருவத் தேர்வுக்கான மையமாக, அப்பகுதியில் உள்ள கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கணினி பயன்பாடுகள் (டிசிஏ) பாடத் தேர்வு, குறிப்பிட்ட மையத்துக்கு பதிலாக வயல்வெளிக்கு அருகே மாணவ, மாணவிகள் வரிசையாக அமர்த்தப்பட்டு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டு பணம் பார்ப்பது, ஆசிரியர்களை மிரட்டி விடைத்தாள்களை தங்கள் விருப்பப்படி திருத்த சொல்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த கல்வி கொள்ளையர்களே, தற்போது ஒரு தேர்வையே தங்கள் இஷ்டப்படி நடத்தியுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close